search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிய விளையாட்டுப் போட்டி"

    ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கல பதக்கத்தை தவறவிட்ட லட்சுமணன் கோவிந்தனுக்கு 10 லட்சம் ரூபாய் பரிசு வழங்கினார் மத்திய அமைச்சர் ரதோர். #AsianGames2018
    ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியாவில் நடைபெற்றது. தடகளத்தில் ஆண்களுக்கான 10 ஆயிரம் மீட்டம் ஒட்டப் பந்தய இறுதிச் சுற்றிற்கு இந்தியா சார்பில் தமிழகத்தின் லட்சுமணன் கோவிந்தன் தகுதிப் பெற்றார். அவருடன் மேலும் 12 பேர் கலந்து தகுதி பெற்றனர்.

    இதில் பஹ்ரைன் வீரர் ஹசன் சானி 28 நிமிடம் 35:54 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு பஹ்ரைன் வீரர் ஆப்ரஹாம் செரோபென் 29 நிமிடம் 00:29 வினாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். தமிழக வீரர் லட்சுமணன் கோவிந்தன் 29 நிமிடம் 44:91 வினாடிகளில் கடந்து வெண்கல பதக்கம் வென்றார்.

    ஆனால் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த லட்சுமணனின் மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. சிறிது நேரத்தில் அவர் பதக்கம் வென்றது செல்லாது என்று அறிவிக்கப்பட்டதும், அதிர்ச்சிக்குள்ளானார்.



    போட்டியின்போது, ஆடுகளத்தில் தனக்கு ஒதுக்கப்பட்ட பாதையை விட்டு சற்று விலகி மற்றொரு பாதையில் அவர் கால்பதித்தது கண்டுபிடிக்கப்பட்டதால் சர்வதேச தடகள சம்மேளன விதிகளின்படி அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

    லட்சுமணனின் தகுதி நீக்கத்தை எதிர்த்து இந்திய தரப்பில் போட்டி அமைப்பு குழுவில் அப்பீல் செய்யப்பட்டது. ஆனால் அது நிராகரிக்கப்பட்டது.

    இந்தியா சார்பில் பதக்கம் வென்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை அழைத்து பிரதமர் மோடி வாழ்த்துக்கள் தெரிவித்தார். விளையாட்டு அமைச்சகம் சார்பிலும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்படடது.

    இந்நிலையில் சிறப்பாக விளையாடி பதக்கம் வெல்ல முடியாமல் போன லட்சுமணன் கோவிந்திற்கு பரிசு வழங்க விளையாட்டுத்துறை அமைச்சர் ரதோர் விரும்பினார். அதற்கான முயற்சியை எடுத்த ரதோர் தற்போது 10 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். இந்த செய்தியை மத்திய விளையாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
    இந்தியா கூடிய விரைவில் பொருளாதாரத்தில் மட்டுமல்லாமல் விளையாட்டிலும் சிறந்த சக்தியாக விளங்கும் என மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். #AsianGames2018 #RajyavardhanSinghRathore #RajnathSingh
    புதுடெல்லி :

    சமீபத்தில் இந்தோனேஷியா தலைநகர் ஜகர்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தியா 15 தங்கம், 24 வெள்ளி மற்றும் 30 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 69 பதக்கங்களை வென்று அசத்தியது.

    ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவிற்கு பதக்கம் வென்று பெறுமையை தேடித் தந்த வீரர்களுக்கு மத்திய அரசின் சார்பில் பரிசுத்தொகை வழங்கும் நிகழ்ச்சி புதுடெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், மத்திய விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும்  மந்திரிகள் கிரன் ரிஜுஜூ, மகேஷ் சர்மா உள்ளிடோர் பங்கேற்றனர்.

    இந்த நிகழ்ச்சியில், தனியாக தங்கப்பதக்கம் வென்ற வீரர்களுக்கு ரூ.40 லட்சமும், வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கம் வென்ற வீரர்களுக்கு முறையே ரூ.20 லட்சம், ரூ.10 லட்சமும், அணியாக தங்கப்பதக்கம் வென்ற அணிகளுக்கு ரூ.60 லட்சமும்  பரிசுத்தொகையாக ராஜ்நாத் சிங் வழங்கினார்.


    அப்போது பேசிய ராஜ்நாத் சிங் இந்தியா கூடிய விரைவில் பொருளாதாரத்தில் மட்டுமல்லாமல் விளையாட்டிலும் சிறந்த சக்தியாக விளங்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், ’ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நம் வீரர்களின் திறமையை பார்த்து மெய் சிலிர்த்துவிட்டேன். விளையாட்டுத்துறையில் மந்திரி ராஜ்யவர்தன் சிங்கின் செயல்பாடுகள் ஒப்பிடமுடியாதது. விளையாட்டிற்கான அவரது அர்ப்பணிப்பை கண்டு ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்பட வேண்டும்.

    கூடிய விரைவில் பொருளாதாரத்தை போன்றே விளையாட்டிலும் சிறந்த சக்தியாக இந்தியா விளங்கும் எனும் நம்பிக்கை எனக்கு உள்ளது. போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வென்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து ஆசிர்வதிக்கிறேன்’ என அவர் கூறினார். #AsianGames2018 #RajyavardhanSinghRathore #RajnathSing
    ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இன்று நடைபெற்ற ஆடவர் ஹாக்கி ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளது. #AsianGames2018
    ஜகர்தா:

    இந்தோனேஷியாவில் நடந்து வரும் ஆசிய விளையாட்டு தொடரில், ஆண்கள் ஹாக்கி போட்டியில் இன்று நடப்பு சாம்பியன் இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொண்டது.

    லீக் ஆட்டங்களில் தோல்வியை சந்திக்காமல் 76 கோல்கள் அடித்து அசத்திய இந்திய அணி, அரை இறுதியில் 6-7 என்ற கோல் கணக்கில் மலேசியாவிடம் தோற்று இறுதிசுற்று வாய்ப்பை இழந்தது.  மற்றொரு அரையிறுதியில் பாகிஸ்தான் அணி 0-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானிடம் தோல்வி கண்டது.

    இதனால், வெண்கலப் பதக்கத்தை கைப்பற்ற இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்றைய போட்டியில் பலப்பரிட்ச்சை நடத்தின. போட்டியின் தொடக்கத்திலேயே இந்திய வீரர் ஆகாஷ்தீப் சிங் கோல் அடித்து அசத்த 1-0 என இந்தியா முன்னிலை பெற்றது

    போட்டியின் 10-வது நிமிடத்தில் சிங்கெல்சனா அடித்த ஷாட்டை பாகிஸ்தான் கோல் கீப்பர் சிறப்பான முறையில் தடுத்ததால் இந்தியாவின் இரண்டாவது கோல் வாய்ப்பு நழுவியது.

    தொடர்ந்து இரண்டு அணி வீரர்களும் கோல் அடிக்க கடுமையாக முயன்றும் முதல் பாதி நேரம் வரை இரு அணிகளாலும் மேற்கொண்டு கோல் அடிக்க முடியவில்லை.

    எனினும் ஆட்டத்தின் 50-வது நிமிடத்தில் தனக்கு கிடைத்த பெணால்டி கார்னர் வாய்ப்பை ஹர்மன்ப்ரீட் சிங் அட்டகாசமான கோலாக மாற்றினார், இதனால் இந்தியா மீண்டும் 2-0 என முன்னிலை பெற்றது.

    இதைத்தொடர்ந்து சில நிமிடங்களிலேயே பாகிஸ்தான் வீரர் அதிக் முகமது கோல் அடிக்கவே ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது, ஆனால் கடைசி வரை இரண்டு அணிகளும் அடுத்த கோல் அடிக்காததால் 2-1 எனும் கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெண்கலப் பதக்கம் வென்றது.

    இதன் மூலம் 15 தங்கம், 24 வெள்ளி, 30 வெண்கலப் பதக்கங்களுடன் இந்தியா பதக்கப்பட்டியலில் 8-வது இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது. #AsianGames2018
    ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இன்று நடைபெற்ற பெண்கள் பிரிவு ஸ்குவாஷ் இறுதி போட்டியில் ஹாங் காங்கிடம் தோல்வியை தழுவியதால் இந்திய அணி வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது. #AsianGames2018
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று பிற்பகல் பெண்கள் ஸ்குவாஷ் அணிகளுக்கான இறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் இந்திய அணி, ஹாங் காங் அணியை எதிர்கொண்டது.

    பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், ஜோஸ்னா சின்னப்பா, தீபிகா பல்லிகல், சுனன்யா, தான்வி ஆகியோர் அடங்கிய இந்திய அணி, 2-0 என்ற கணக்கில் ஹாங் காங் அணியிடம் தோல்வி அடைந்தது.

    இதனால், இரண்டாம் இடம் பிடித்த இந்திய அணி வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது. இந்த போட்டியின் முடிவில் இந்தியா 15 தங்கம், 24 வெள்ளி, 29 வெண்கலம் என மொத்தம் 68 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 8-வது இடத்தில் நீடிக்கிறது.  #AsianGames2018  
    ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இன்று நடைபெற்ற மகளிர் ஹாக்கி இறுதி போட்டியில் ஜப்பான் அணியிடம் இந்தியா தோல்வியை தழுவியதால் வெள்ளிப் பதக்கம் வென்றது. #AsianGames2018
    ஜகார்தா :

    18-வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவின் ஜகார்தா மற்றும் பாலெம்பேங் நகரங்களில் நடந்து வருகிறது.

    இதில் பெண்கள் ஹாக்கி இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றது. ராணி ராம்பால் தலைமையிலான இந்திய அணி லீக் ஆட்டத்தில் நான்கு போட்டியிலும் வெற்றி பெற்றது.

    இந்தோனேஷியா (8-0), கஜகஸ்தான் (21-0), தென்கொரியா (4-1), தாய்லாந்து (5-0) ஆகிய அணிகளை வீழ்த்தியது. அரை இறுதியில் சீனாவை 1-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இதுவரை 39 கோல்கள் அடித்து தோல்வியே சந்திக்காமல் இந்தியா இறுதிப்போட்டியில் முன்னேறி இருக்கிறது.  

    இந்நிலையில், இன்று நடைபெற்ற தங்கப்பதக்கத்துக்கான இறுதிப் போட்டியில் இந்தியா- ஜப்பான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
    இதில், 2-1 எனும் கோல் கணக்கில் ஜப்பானிடம் இந்திய அணி தோல்வியை தழுவியது.

    விருவிருப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஆட்டம் தொடங்கிய 12-வது நிமிடத்திலேயே ஜப்பான் பெணால்டி கார்னர் முறையில் கோல் அடித்து 1-0 என் முன்னிலை பெற்றது.

    இதைத்தொடர்ந்து, ஆட்டத்தின் 28-வது நிமிடத்தில் இந்திய வீராங்கணை நவ்னீத் அட்டகாசமான கோல் அடிக்க இரண்டு அணிகளும் 1-1 என சமநிலை பெற்றது.

    பின்னர் இரண்டு அணிகளும் தங்கப்பதக்கத்திற்கான அடுத்த கோல் அடிப்பதற்காக முனைப்பு காட்டி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஆனால் ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் ஜப்பான் அணி மீண்டும் பெணால்டி கார்னர் முறையில் கோல் அடித்ததால் இந்தியாவின் வெற்றிக் கனவு தகர்ந்தது.

    இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவினாலும் வெள்ளிப் பதக்கத்தை வென்றது இந்தியா, இதன் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் பதக்கப்பட்டியலில் 13 தங்கம், 23 வெள்ளி மற்றும் 29 வெண்கலப் பதக்கங்களுடன் இந்தியா 8-வது இடத்தில் உள்ளது. #AsianGames2018 
    ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஸ்குவாஷ் அரையிறுதி போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது. #AsianGames2018 #IndianSquashTeam
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆண்கள் ஸ்குவாஷ் அணிகளுக்கான பிரிவில் இன்று அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. இதில், நடப்பு சாம்பியனான இந்திய அணி, ஹாங் காங் அணியை எதிர்கொண்டது.

    சவுரவ் கோஷல், ஹரிந்தர் பால் சிங் சந்து, ரமித் தாண்டன் மற்றும் மகேஷ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி, 0-2 என்ற கணக்கில் ஹாங் காங் அணியிடம் தோல்வியை தழுவியது. இதனால், மூன்றாம் இடம் பிடித்த இந்தியா வெண்கலப் பதக்கம் வென்றது.

    முன்னதாக பெண்கள் ஸ்குவாஷ் அணி அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதன்மூலம் அவர்களுக்கு வெள்ளிப் பதக்கம் உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. #AsianGames2018 #IndianSquashTeam
    ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இன்று நடைபெற்ற பாய்மர படகுப்போட்டிகளில் ஒரு வெள்ளி உள்பட 3 பதக்கங்களை இந்தியா கைப்பற்றியுள்ளது. #AsianGames2018
    ஜகர்த்தா :

    இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று பாய்மர படகுப்போட்டிகள் நடைபெற்றன. இதில் பெண்களுக்கான 49er FX பிரிவில் இந்தியாவின் வர்ஷா கவுதம், ஸ்வேதா ஷர்வேகர் ஆகியோர் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

    பாய்மர படகுப்போட்டியில் ஆண்களுக்கான 49er பிரிவின் மற்றொறு போட்டியில் வருண் தாக்கர் அஷோக் மற்றும் செங்கப்பா கணபதி கேலபண்டா ஜோடி மூண்றாம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றது.

    பெண்களுக்கான ஒற்றையர் பாய்மர படகுப்போட்டியின் ஓப்பன் லேசர் 4.7 பிரிவில் ஹர்ஷிதா தோமர் வெண்கலப் பதக்கம் வென்றார்.
    இதன் மூலம், 13 தங்கம், 22 வெள்ளிப் பதக்கங்களுடன் ஆசிய விளையாட்டுப் போட்டி பதக்கப்பட்டியலில் இந்தியா 8-வது இடத்தில் உள்ளது. #AsianGames2018
    ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று குண்டு எறிதலில் இந்திய வீரர் தஜிந்தர்பால் சிங் தூர் தங்கம் வென்றார். இதன் மூலம் இந்தியா ஏழாவது தங்கப்பதக்கத்தை பெற்றுள்ளது. #TejinderpalSinghToor #AsianGames
    ஜகர்தா:

    இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 6 தங்கம், 5 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தம் 28 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.

    இன்று ஒரே நாளில் ஸ்குவாஷ் போட்டிகளில் இந்திய வீரர்கள் மூன்று வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.

    இந்நிலையில்,  இன்றிரவு குண்டு எறிதலில் 20.75 மீட்டர் தூரம் குண்டு வீசி புதிய சாதனை படைத்த இந்திய வீரர் தஜிந்தர்பால் சிங் தூர் மேலும் ஒரு தங்கம் வென்று இந்தியாவுக்கு கிடைத்த தங்கப்பதக்கத்தின் எண்ணிக்கையை ஏழாக உயர்த்தியுள்ளார். #TejinderpalSinghToor  #AsianGames
    ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை ஹீனா சித்து வெண்கலப் பதக்கம் வென்றார். #AsianGames2018 #HeenaSidhu
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டித் தொடரில் இன்று இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகின்றனர். குறிப்பாக துடுப்பு படகுப் போட்டி மற்றும் டென்னிஸ் போட்டியில் இந்தியாவுக்கு 2 தங்கப் பதக்கம் கிடைத்தது.

    இந்நிலையில், மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது. தகுதிச்சுற்றில் இந்திய வீராங்கனைகள் மானுபாகர், ஹீனா சித்து ஆகியோர் பங்கேற்றனர். மானுபாகர் 574 புள்ளிகளுடன் 3-வது இடமும், ஹீனாசித்து 571 புள்ளிகளுடன் 7-வது இடமும் பிடித்து இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

    அதன்பின்னர் நடைபெற்ற இறுதிச்சுற்றில் ஹீனா சித்து 219.2 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தைப் பிடித்தார். இதனால் அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. மனு பாகர் 176.2 புள்ளிகளுடன் 5-வது இடத்திற்கு பின்தங்கி பதக்க வாய்ப்பை இழந்தார். இப்பிரிவில் சீனாவின் வாங் கியான் தங்கப்பதக்கமும், தென் கொரியாவின் கிம் மிஞ்சங் வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.

    ஆண்களுக்கான 300 மீட்டர் ஸ்டாண்டர்ஸ் ரைபிள் இறுதிப்போட்டியில் இந்திய வீரர்கள் ஹர்ஜிந்தர்சிங் 560 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், அமீத்குமார் 559 புள்ளிகளுடன் 5-வது இடமும் பிடித்து பதக்கத்தை தவறவிட்டனர்.

    இப்போட்டியில் கொரியாவின் யங்ஜியன் (569) தங்கமும், சவுதி அரேபியா வீரர் அல்ஹர்பி (568) வெள்ளியும், கொரியாவின் லீ வாங்கு (563) வெண்கலமும் வென்றனர். #AsianGames2018 #HeenaSidhu
    ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று நடைபெற்ற 4 பேர் துடுப்பு படகு போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றுள்ளது. #AsianGames2018 #IndiaRowingTeam
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப்போட்டியில் இன்று துடுப்பு படகு போட்டிகள் நடைபெற்றன. இதில் இந்திய வீரர்கள் சாதனை படைத்துள்ளனர். ஆண்களுக்கான இலகுரக துடுப்பு படகு ஒற்றையர் பிரிவில் துஷ்யந்த், இரட்டையர் பிரிவில் ரோகித் குமார், பகவான் தாஸ் ஆகியோர் வெண்கலம் வென்றனர்.

    இந்நிலையில் 4 வீரர்கள் பங்கேற்கும் துடுப்பு படகு போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றுள்ளது. இந்திய அணியில் சவார்ன் சிங், போகனால், ஓம் பிரகாஷ், சுக்மீத் சிங் ஆகியோர் இணைந்து நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 6 நிமிடம் 17.13 வினாடிகளில் கடந்து சாதனை படைத்தனர். இந்தோனேசிய அணி வெள்ளிப் பதக்கமும், தாய்லாந்து அணி வெண்கலப் பதக்கமும் வென்றது.

    இந்த வெற்றியின்மூலம் இந்திய அணி 5 தங்கம், 4 வெள்ளி,  12 வெண்கலம் என மொத்தம்  21 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 9-வது இடத்திற்கு முன்னேறியது. #AsianGames2018 #IndiaRowingTeam
    ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று நடைபெற்ற துடுப்பு படகு போட்டியில் இந்தியாவுக்கு 2 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன. #AsianGames2018
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப்போட்டியில் இன்று துடுப்பு படகு போட்டிகள் நடைபெற்றன. இதில் இந்திய வீரர்கள் சாதனை படைத்துள்ளனர்.



    ஆண்களுக்கான இலகுரக துடுப்பு படகு ஒற்றையர் பிரிவில் துஷ்யந்த் வெண்கலம் வென்றார். இவர் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 7 நிமிடம் 18.76 வினாடிகளில் எட்டினார். இதேபோல் இலகுரக துடுப்பு படகு இரட்டையர் பிரிவில் ரோகித் குமார், பகவான் தாஸ் ஆகியோர் இணைந்து வெண்கலம் வென்றுள்ளனர்.

    இதன்மூலம் இந்தியா 4 தங்கம், 4 வெள்ளி, 12 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 10 இடத்தில் உள்ளது. #AsianGames2018
    ஆசிய விளையாட்டுப் போட்டியின் துப்பாக்கி சுடுதலில் 16 வயதான மனு பாகெர் 593 புள்ளிகள் பெற்று இறுதிசுற்றுக்கு தகுதி பெற்றார். #ManuBhaker #AsianGames2018
    ஜகார்தா:

    18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தோனேசியாவின் ஜகார்தா மற்றும் பாலெம்பேங் நகரங்களில் நடந்து வருகிறது.

    4-ம் நாளான இன்று காலை பெண்களுக்கான 25 மீட்டர் பிரிவில் தகுதி சுற்று நடந்தது. இதில் இந்திய வீராங்கனைகள் மனுபாகெர், ரகி சர்னோபட் பங்கேற்றனர். 16 வயதான மனு பாகெர் 593 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்து இறுதிசுற்றுக்கு தகுதி பெற்றார். இதேபோல் ரகி சர்னோபட் 580 புள்ளிகளுடன் 7-வது இடத்தை பிடித்து இறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன் இறுதிப் போட்டி இன்று மாலை நடக்கிறது.

    பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் (நிலை 3) பிரிவில் இந்திய வீராங்கனைகள் அனுஜூம் (1159 புள்ளி) 9-வது இடமும், காயத்ரி நித்யானந்தம் (1148 புள்ளி) 17-வது இடமும பெற்று இறுதி சுற்று வாய்ப்பை இழந்தனர். #ManuBhaker #AsianGames2018
    ×